ஆடிப்பெருக்கை முன்னிட்டு 3-ம் தேதி - சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை :

ஆடிப்பெருக்கை முன்னிட்டு 3-ம் தேதி -  சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை  :
Updated on
1 min read

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு வரும் 3-ம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடி 18-ம் தேதி கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு வரும் 3-ம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் உள்ளூர் விடுமுறை தினத்தில் செயல்பட அனுமதி மறுக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் வராது என்பதால் அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள் கவனிக்கும் பொருட்டு வரும் 3-ம் தேதி அன்று, மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வரும் 28-ம் தேதி சனிக்கிழமையன்று பணி நாளாக செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in