Published : 01 Aug 2021 06:32 AM
Last Updated : 01 Aug 2021 06:32 AM
திருநெல்வேலி அருகே தாழையூத்தில் ஒப்பந்ததாரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத் தலைவர் கண்ணபிரானை போலீஸார் கைது செய்தனர்.
வடக்கு தாழையூத்து பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் கண்ணன் (33). இவர், கடந்த 12-ம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் அம்மு என்ற அம்மு வெங்கடேஷ், நல்லதுரை, சங்கிலி பூதத்தான், குரு சச்சின், இசக்கிமுத்து, முத்து கிருஷ்ணன், சதீஷ் ராஜா, அதிசயபாண்டி ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத் தலைவர் கண்ணபிரான் என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT