காரையாறு, குமரி கோயில்களில் தரிசனத்துக்கு தடை :

காரையாறு, குமரி கோயில்களில் தரிசனத்துக்கு தடை :

Published on

கரோனா தொற்று காரணமாக நாளை (2-ம் தேதி) முதல் வரும் 9-ம் தேதி வரை திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், காரையாறு சொரிமுத்தையனார் கோயில், பாபநாசம் பாபநாச சுவாமி கோயில் ஆகியவற்றில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றங்கரை மற்றும் படித்துறைகளில் ஆடி அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் உள்ளிட்ட பிற சடங்குகள் செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இது போல் கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 3 நாட்கள் மற்றும் ஆடி அமாவாசை தினத்தன்று கடற்கரை, முக்கடல் சங்கமம், குழித்துறை தாமிரபரணி ஆறு உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் நீராடவும், முக்கிய கோயில்களில் தரிசனம் செய்யவும் மற்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in