

திருவண்ணாமலையில் உள்ள குழந்தை நலக் குழுமத்திடம் பெண் குழந்தையை ஆட்சியர் பா.முருகேஷ் ஒப்படைத்தார்.
தி.மலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த மாதம் 23-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை வளர்க்க முடியாத சூழ்நிலையில் இருப்பதால், சமூக நலத்துறை கட்டுப்பாட்டில், தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் செயல்படும் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டது.
அக்குழந்தைக்கு ‘லட்சுமி’ என ஆட்சியர் பா.முருகேஷ் பெயர் சூட்டினார். மேலும் அவர், தி.மலையில் செயல்பட்டு வரும் குழந்தை நலக் குழுமத்திடம் ஒப் படைத்தார். அப்போது, மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) கந்தன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.