

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இளை ஞரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.
பூவற்றக்குடியைச் சேர்ந்த வர் சி.நாகூரான்(43). அதே பகுதியைச் சேர்ந்தவர் பி.துரை(43). இருவரும் கட்டிடத் தொழிலாளர்கள். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாகூரானிடம் இருந்து துரை ரூ.1,000 கடன் வாங்கினாராம். அதில், வேலை செய்து ரூ.600-ஐ கழித்துள்ளார். மீதி ரூ.400-ஐ திருப்பிக் கொடுக்க வில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, நாகூரானும், அவரது மனைவி இந்திராவும் மீதிப் பணத்தை தருமாறு துரையிடம் கேட்டுள்ளனர். இதனால், இரு குடும்பத்தி னருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, ஆத்திரமடைந்த துரை கத்தியால் குத்தியதில், நாகூரான் மகன் மாரிமுத்து(22) அந்த இடத்திலேயே உயிரிழந் தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீஸார் வழக்கு பதிவு செய்து துரை மற்றும் அவரது மனைவி செல்வமணி(40) ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன் றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.அப்துல்காதர், குற்றம் சாட்டப்பட்ட துரை மற்றும் செல்வமணி ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.