செஞ்சியில் 495 பயனாளிகளுக்கு ரூ.40.95 லட்சம் நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் மஸ்தான் வழங்கினார்

செஞ்சியில்  495 பயனாளிகளுக்கு ரூ.40. 95 லட்சம் மதிப்பிலான அரசு  நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.
செஞ்சியில் 495 பயனாளிகளுக்கு ரூ.40. 95 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.
Updated on
1 min read

செஞ்சியில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பாக 495 பயனாளிகளுக்கு ரூ.40,95,199 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மஸ்தான் நேற்று வழங்கினார்.

ஊரக வளர்ச்சித்துறையின் சார்பாக கருணை அடிப்படையில் ஒருவருக்கு பணிநியமன ஆணை யினை அமைச்சர் மஸ்தான் வழங்கினார். அப்போது அவர் பேசியது:

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பணிபுரியும்பணியாளர்கள் தங்களுடைய பணிகளை சிறப்பாக மேற்கொள்வதன் மூலமே வருவாய் முழுமையாக கிடைக்கப்பெறும். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டப் படுவதற்கான ஆணையினை பெற்றவர்கள் உடனடியாக வீடுகளை கட்டி முடிக்க வேண்டும். இவர்கள் வீடுகளை கட்டி முடித்தால் மட்டுமே மற்றவர்களுக்கும் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

நிகழ்வில் ஆட்சியர் மோகன், மயிலம் எம் எல் ஏசிவக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், திட்ட இயக்குநர் காஞ்சனா, திண்டிவனம் உதவி ஆட்சியர் எம்.பி.அமித், வேளாண் துறை இணை இயக்குநர் ரமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in