

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருநெல்வேலி வண்ணார் பேட்டையில் அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில துணை பொதுச்செயலாளர் பி. சுதர்சிங் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாலர் ஆர். மோகன், மத்திய சங்க துணைத் தலைவர்கள் ஆர். அருண், எம்.கருப்பசாமி, ஆர். பிச்சைமணி, உதவி செயலாளர் ஆர். பொன்ராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மின்சார பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியம் வழங்க வேண்டும்.
மத்திய நிதிநிலை அறிக்கையில் நகர்ப்புற போக்குவரத்து வசதிக்கு ஒதுக்கிய தொகையை போக்கு வரத்துக் கழகங்களுக்கு வழங்க வேண்டும்.
தனியார் பங்களிப்புடன் திட்டங் களை அமலாக்கும் முடிவை கைவிட வேண்டும். ஓய்வுபெற்றோருக்கான பணப்பலன்களை வழங்க வேண்டும். பாகுபாடின்றி பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஊதிய பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.