தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளர்களுக்கு - மீண்டும் பணி வழங்கக் கோரி மனு :

தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளர்களுக்கு -  மீண்டும் பணி வழங்கக் கோரி மனு :
Updated on
1 min read

திருநெல்வேலி மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

அதன் தலைவர் ஆர். மோகன் உள்ளிட்டோர் அளித்த மனு விவரம்:

திருநெல்வேலி மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பரப்புரையாளர்கள், மேற்பார்வையாளர்கள் என 33 பேர் கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து பணிபுரிந்து வந்தனர். கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு கழிப்பறை உருவாக்குதல், வீடுவீடாகச் சென்று குப்பைகளை தரம்பிரித்து தருமாறு அறிவுறுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த 1.7.2021 முதல் ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக கூறி இத்தொழிலாளர்களுக்கு வேலை வழங்க மறுத்துவிட்டனர்.

திடீரென்று வேலை இல்லை என்று தெரிவித்துள்ளதால் இவர்கள் செய்வதறியாது இருக்கிறார்கள். இவர்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தில் பணி வழங்க முடியாவிட்டால் சுயஉதவி குழுக்கள் மூலமாக மீண்டும் இவர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென்று வேலை இல்லை என்று தெரிவித்துள்ளதால் இவர்கள் செய்வதறியாது இருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in