நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் - நெல் அரவை முகவராக விண்ணப்பங்கள் வரவேற்பு :

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில்  -  நெல் அரவை முகவராக விண்ணப்பங்கள் வரவேற்பு :
Updated on
1 min read

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புழுங்கல் அரிசி அரவை முகவராக நியமனம் செய்ய தனியார் அரவை ஆலை உரிமையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது, என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் கழக நவீன அரிசி ஆலைகள் மற்றும் கழகத்தில் அரவை முகவராக உள்ள தனியார் அரவை ஆலைகள் மூலம் அரவை செய்து பொது விநியோகத் திட்டத்திற்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது

இதன்படி நாமக்கல் மண்டலத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லினை அரவை செய்து பொது விநியோகத் திட்டத்திற்கு அரிசி வழங்குவதற்கு ஏதுவாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கொண்ட தனியார் அரவை ஆலை உரிமையாளர்களிடமிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புழுங்கல் அரிசி அரவை முகவராக நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கூடுதல் விவரம் அறிய மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் - 637 003 என்ற அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in