

இந்த உதவி மையங்கள் மூலம் முதியோர் இல்லங்கள், பராமரிப்பு மையங்கள், பராமரிப்பாளர்கள், மருத்துவ ஆலோசனை வழங்கும் இடங்கள், வலி நிவாரண மையங்கள் குறித்து தேவைப்படும் தகவல்கள், அரசு திட்டங்களை பெறும் வழிமுறைகள், சட்ட வழிகாட்டுதல்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும், மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை, ஆதரவற்ற இடங்களில் உள்ள முதியோர் மீட்பு, குடும்ப உறுப்பினர்கள் அல்லது பிறரால் துன்புறுத்தப்படும் முதியோர்களுக்கு ஆதரவு அளித்து பிரச்சினைகளைத் தீர்க்க வழிகாட்டுதல் போன்ற சேவைகள் வழங்கப்படும். இந்த உதவி மையம் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்’’எனத் தெரிவித்துள்ளார்.