Regional01
பெரியகுளத்தில் மருந்து கடையில் - ரூ.2 லட்சம் திருட்டு :
தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்தவர் மோகன். இவர் போலீஸ் அவுட் போஸ்ட் அருகே மருந்துக்கடை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு கடையைப் பூட்டி விட்டு நேற்று காலையில் கடையைத் திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ரூ.2 லட்சம் மற்றும் மருந்துப் பொருட்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.
காவல் துணை கண்காணிப் பாளர் முத்துக்குமார் நேரில் விசாரணை நடத்தினார்.
இதேபோல் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவரது வீட்டில் ஜன்னல் கம்பியை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான நகை திருடப்பட்டுள்ளது.
இரண்டு வழக்குகளையும் தென்கரை போலீஸார் விசாரிக் கின்றனர்.
