Regional01
வருவாய் ஆய்வாளர் இருவருக்கு பதவி உயர்வு :
திருப்பத்தூர் மாவட்டத்தில் வருவாய் ஆய் வாளராக பணியாற்றி வந்த 2 பேருக்கு துணை வட்டாட்சியராக பதவி உயர்வு வழங் கப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த புகழேந்தி, துணை வட்டாட்சியராக பதவி உயர்வு வழங்கப்பட்டு, அதே அலுவலகத்தில் காலியாக உள்ள கண்காணிப்பாளர் பணியிடத் துக்கும், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த ராமன், துணை வட்டாட்சியராக பதவி உயர்வு பெற்று திருப்பத்தூர் கலால் உதவி ஆணையர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக நியமித்து ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று உத்தரவிட்டுள்ளார்.
