காளிப்பட்டியில் 5 ஆண்டுகளாக மூடியிருந்த நூலகம் திறப்பு :

காளிப்பட்டியில் 5 ஆண்டுகளாக மூடியிருந்த நூலகம் திறப்பு :

Published on

திருச்செங்கோடு அடுத்த காளிப்பட்டியில் கடந்த 2016-ம் ஆண்டு பகுதி நேர நூலகம் கட்டி முடிக்கப்பட்டது. எனினும் அந்த நூலகம் திறக்கப்படாமல் இருந்தது. நூலகத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், அந்நூலகம் முறைப்படி நூலகத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. முதல்நிலை நூலகர் சீனிவாசன் தலைமை வகித்தார். திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் பங்கேற்று நூலகத்தை திறந்து வைத்தார். நூலகர்கள் சாந்தி, கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in