பாஜக ஆர்ப்பாட்டம் :

திருநெல்வேலியில் சந்திப்பு ரயில் நிலையம் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: மு.லெட்சுமிஅருண்
திருநெல்வேலியில் சந்திப்பு ரயில் நிலையம் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: மு.லெட்சுமிஅருண்
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் சர்ச்சைக்குரிய பேச்சால் 7 பிரிவுகளில் கைது செய்யப் பட்டுள்ள பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை தேசிய பாது காப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திருநெல்வேலியில் சந்திப்பு ரயில் நிலையம் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட தலைவர் மகாராஜன் தலைமை வகித்தார்.

செங்கோட்டையில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு நகரத் தலைவர் வேம்புராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ராமராஜா, மாவட்ட துணைத்தலைவர் பாலகுருநாதன், மாவட்டச் செயலாளர் மாரியப்பன், நிர்வாகிகள் குத்தாலிங்கம், முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கோவில்பட்டி

தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே பாஜக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட தலைவர் பி.எம்.பால்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் வி.எஸ்.ஆர்.பிரபு, செயலாளர் டி.ரவிச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in