திருப்பத்தூர் நகராட்சிக்கான - வரி இனங்களை பொதுமக்கள் தவறாமல் செலுத்த வேண்டும் : புதிய ஆணையாளர் ஏகராஜ் அறிவுறுத்தல்

திருப்பத்தூர் நகராட்சி ஆணையாள ராக ஏகராஜ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருப்பத்தூர் நகராட்சி ஆணையாள ராக ஏகராஜ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
Updated on
1 min read

நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை பொதுமக்கள் தவறாமல் செலுத்த வேண்டும் என ஆணையாளர் ஏகராஜ் தெரி வித்துள்ளார்.

திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த சத்தியநாதன் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளராக பணியிட மாற்றம் செய்யப் பட்டார். இதைத்தொடர்ந்து, நாகப்பட்டினம் நகராட்சியின் ஆணை யாளராக பணியாற்றி வந்த ஏகராஜ் திருப்பத்தூர் ஆணையாளராக பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளராக ஏகராஜ் நேற்று காலை பொறுப் பேற்றுக்கொண்டார். அவருக்கு, சுகாதார அலுவலர் ராஜரத்தினம், சுகாதார ஆய்வாளர் குமார் மற்றும் அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் ஏகராஜ் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் நகராட்சியில் நிதி ஆதாரத்தை பொறுத்து வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, குடிநீர், மின் விளக்கு, சாலை, பொது சுகாதாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். திருப்பத்தூர் நகராட்சியில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள நிதிஆதாரம் முக்கியமானதாக கருதப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள கடை வாடகை, சொத்து வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை முறையாக செலுத்தி நகராட்சி வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்’’என்றார்.

அதேபோல, வாணியம்பாடி நகராட்சி ஆணையாளராக சத்தியநாதன் நேற்று காலை பொறுப் பேற்றுக்கொண்டார். அவருக்கும், சுகாதார ஆய்வாளர்கள், நகராட்சி ஊழியர்கள் வாழ்த்து தெரிவித் தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in