விதை நெல் போதுமான அளவு இருப்பில் உள்ளது : கீரப்பாளையம் வேளாண் அதிகாரி தகவல்

விதை நெல் போதுமான அளவு இருப்பில் உள்ளது :  கீரப்பாளையம் வேளாண் அதிகாரி தகவல்
Updated on
1 min read

சம்பா பருவத்துக்கேற்ற நெல்விதைகள் மானியத்தில் விவசா யிகளுக்கு வழங்கப்படுகிறது என்று கீரப்பாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் சித்ரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கீரப்பாளையம் வட்டார விவசாயிகள் நடப்பு சம்பா பருவத்திற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். சம்பா பருவத்தில் அதிக மகசூல் மற்றும் அதிக லாபம் கிடைத்திட வேளாண் துறை அறிவுறுத்தும் நடப்பு சம்பா பருவத்திற்கேற்ற நெல் விதை ரகங்கள் சிஆர்-1009. டிகேஎம்-13, என்எல்ஆர்-34449, டிஆர்ஒய்-3, சிஓ-51, சிஓ-50, பிபிடி-5204 ஆகிய விதைகள் கீரப்பாளையம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் போதுமான அளவில் இருப்பில் உள்ளது. இதனுடன் நெல் பயிர்க்கான நெல் நுண்ணூட்டம், திரவ உயிர் உரங்கள் மானியவிலையில் தரப்படுகிறது. விவசாயிகள் தவறாமல் இதனை பெற்று பயனடையலாம் என்று கூறப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in