இலங்கை அகதிகள் முகாமில் - இலவச சிறப்பு மருத்துவ முகாம் :

இலங்கை அகதிகள் முகாமில் -  இலவச சிறப்பு மருத்துவ முகாம் :
Updated on
1 min read

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இளையோர் ரெட் கிராஸ் மண்டலம், திருச்சி மாநகர காவல்துறை மற்றும் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி சார்பில் கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.

முகாமுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.செல்வம் தலைமை வகித்தார். பல்கலைக்கழகப் பதிவாளர் கோபிநாத் கணபதி, மருத்துவக் கல்லூரி துணை இயக்குநர் பாலசுப்பிரமணியன், ரெட்கிராஸ் சங்க மாவட்டத் தலைவர் ராஜசேகரன், இலங்கை அகதிகள் முகாம் சிறப்பு துணை ஆட்சியர் ஜமுனாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர காவல் துணை ஆணையர் சக்திவேல் முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில், ஏறத்தாழ 400 பேருக்கு மருத்துவக் குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டு, மருந்துகளை வழங்கினர். முகாமுக்கான ஏற்பாடுகளை பாரதிதாசன் பல்கலைக்கழக இளையோர் ரெட்கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் செய்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in