

திருநெல்வேலி வண்ணார் பேட்டையில் பல்வேறு தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதுகாப்புத் துறையை தனியாருக்கு விற்பதை கண்டித்தும், வேலைநிறுத்த உரிமைச் சட்டத்தை தடை செய்வதை கண்டித்தும் இப்போராட்டம் நடத்தப்பட்டது. தொமுச அமைப்புச் செயலாளர் ஏ. தர்மன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ஆர்.சடையப்பன், எச்.எம்.எஸ். மாவட்டச் செயலாளர் பி. சுப்பிரமணியன், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் கிருஷ்ணன், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் கே.கணேசன், டிடிஎஸ்எப் மாநிலத் துணை தலைவர் எஸ். சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.