

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்பு டைய 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தாழையூத்து காவல் நிலையத்தில், கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட தாழையூத்து பூந்தோட்டத் தெருவை சேர்ந்த முருகன் (30), வி.கே புரம் காவல் நிலையத்தில் கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் கைது செய்யப்பட்ட திருநெல்வேலி டவுன், பாரதியார் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் இசக்கிமுத்து (19), திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட பாளையங்கோட்டை வட்டம், மேலப்பாட்டத்தைச் சேர்ந்த குமார் மகன் சிவா (23) ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்பி மணிவண்ணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் ஆட்சியர் வே.விஷ்ணு உத்தரவிட்டதையடுத்து 3 பேரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.