

தியாகத் திருநாளான பக்ரீத்பண்டிகை உலகம் முழுவதும்முஸ்லிம்களால் கொண்டாடப் படும் முக்கிய பண்டிகை ஆகும்.அந்தவகையில் பக்ரீத் பண்டிகையை யொட்டி நேற்று கடலூர், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, நெல்லிக்குப்பம், நெய்வேலி, விருத்தாசலம், மங்கலம்பேட்டை, லால்பேட்டை, ஆயங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள் சிறப்புதொழுகை நடத்தினர்.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஆயங்குடி ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை நடை பெற்றது.
இதில் 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சிறப்பு தொழு கையில் கலந்து கொண்டனர் பின்னர் உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனையும் நடை பெற்றது.
விழுப்புரம்
புதுச்சேரி
தொழுகை நடந்த அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.