சேலம் மாவட்டத்துக்கு 22,000 டோஸ் தடுப்பூசி வந்தது :

சேலம் மாவட்டத்துக்கு 22,000 டோஸ் தடுப்பூசி வந்தது :

Published on

சேலம் மாவட்டத்துக்கு 22 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன.

சேலம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால், கடந்த இரு நாட்களாக தடுப்பூசி மையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், சேலம் சுகாதார மாவட்டத்துக்கு 16 ஆயிரத்து 500 டோஸ்களும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்துக்கு 5 ஆயிரத்து 500 டோஸ்கள் என மொத்தம் 22 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வந்துள்ளன.

இதையடுத்து, அவை தடுப்பூசி மையங்களுக்கு பிரித்து அனுப்பி வைத்து மக்களுக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in