

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திண்டுக்கல் மாநகராட்சியில் பொதும க்களுக்கு 5 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், மாநகராட்சி அலு வலகத்தில் விண்ணப்பித்து குடிநீர் இணைப்பு பெற்று பொதுமக்கள் பயன் அடையலாம்.
மேலும் 1200 பாதாள சாக்கடை இணைப்புகளும் வழங்கப்பட உள்ளன. இதற்குரிய விண்ணப்பங்களை மாநகராட்சியில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் பணி உத்தரவு வழங்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.