மாட்டு வண்டித் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் - கொள்ளிடம் ஆற்றில் 4 இடங்களில் மணல் குவாரி : அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்

அரியலூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளி ஒருவருக்கு இலவச வீட்டுமனை பட்டாவுக்கான ஆணையை வழங்கிறார் மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். உடன், ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, எம்எல்ஏக்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன் உள்ளிட்டோர்.
அரியலூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளி ஒருவருக்கு இலவச வீட்டுமனை பட்டாவுக்கான ஆணையை வழங்கிறார் மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். உடன், ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, எம்எல்ஏக்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

மாட்டு வண்டித் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், கொள்ளி டம் ஆற்றில் 4 இடங்களில் மணல் குவாரி அமைக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

அரியலூரில் ‘உங்கள் தொகுதி யில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உத விகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சி யர் பெ.ரமண சரஸ்வதி தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித் தொகைக்கான ஆணை, தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, மாற்றுத்திறனாளிக்கு கூடுதல் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் என 1,296 பயனாளிகளுக்கு ரூ.10.27 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியது:

அரியலூர் மாவட்டத்தில் நிரந்தர கொள்முதல் நிலையம் அமைக்க இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. வரும் சம்பா பருவத்துக்குள் அதிகப்படியான நெல் கொள்முதல் செய்து இருப்பு வைக்கும் வகையில், பாதுகாப்பு நிலையம் அமைக்கப்படும்.

மேலும், மாட்டுவண்டி தொழி லாளர்கள் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் 4 இடங்களில் மணல் குவாரி அமைக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பொ.சந்திரசேகர், திருமானூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி சுமதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், கோட்டாட்சியர் ஏழுமலை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஸ்டெல்லா ஞானமணி பிரமிளா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in