Published : 21 Jul 2021 03:16 AM
Last Updated : 21 Jul 2021 03:16 AM
புதுக்கோட்டை அருகே முள்ளூரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 100 ஏக்கரில், ரூ.56.31 கோடி மதிப்பில், 1,603 வீட்டு மனைகளுடன் துணைக்கோள் நகரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதை ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநர் எஸ்.ஜே.சிரு நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: துணைக்கோள் நகரத்தில் உயர் வருவாய் பிரிவில் தலா 2,711 சதுர அடியில் 339 மனைகளும், மத்திய வருவாய் பிரிவில் தலா 2,325 சதுர அடியில் 280 மனைகளும், குறைந்த வருவாய் பிரிவில் தலா 1,452 சதுர அடியில் 218 மனைகளும், பொரு ளாதாரத்தில் நலிவுற்றப் பிரிவில் தலா 431 சதுர அடியில் 766 மனைகளும் அமைக்கப்பட உள்ளன. இந்த துணைக் கோள் நகரத்தில் மழைநீர் வடிகால் அமைப்பு, தார்ச் சாலைகள், குடிநீர் இணைப்பு மற்றும் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தப்படும்.
மேலும், பள்ளி, வணிக வளாகம், பொது உபயோகம், பூங்காக்கள் போன்றவற்றுக்கு இடம் ஒதுக்கப்படும். 6 மாதங்களுக்குள் இப்பணிகள் முடிக்கப் படும். சேதமடைந்த வீட்டுவசதி வாரிய வீடுகளை சீரமைக்கவும் தேவையான நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
பின்னர், புதுக்கோட்டை கம்பன்நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ரூ.4.39 கோடியில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டு மானப் பணிகளையும் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைமைப் பொறியாளர் சரவணன், கண்காணிப்பு பொறியாளர் தியாகராஜன், செயற்பொறியாளர் மனோகரன், உதவி செயற்பொறியாளர் ஜேக்கப், உதவி பொறியாளர் பார்த்திபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT