

திருநெல்வேலி மாவட்டம் திசையன் விளை அருகே கழிவுநீர் தொட்டி அமைக்க தோண்டப்பட்ட குழியில் மணல் சரிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி சிக்கினார்.
திசையன்விளை அருகே கரைசுத்து உவரி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். வீட்டின் பின்பகுதியில் உறைகிணறு அமைக்க குழி தோண்டப்பட்டிருந்தது. அதில் கற்கள் பதிக்கும் பணியில் குமரி மாவட்டம் பறக்கையைச் சேர்ந்த பிரவீன் (27) என்பவர் ஈடுபட்டிருந் தார். திடீரென மணல் சரிந்து பிரவீன் மீது விழுந்தது. குழிக்குள் சிக்கிய அவரை மீட்கும் பணியில் திசையன்விளை மற்றும் வள்ளியூர் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். 4 மணிநேர போராட்டத்துக்கு பின் பிரவீன் மீட்கப்பட்டார்.