பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட : முதிர்வு தொகை கோரி விண்ணப்பம் :

பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட : முதிர்வு தொகை கோரி விண்ணப்பம் :
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மாவட்ட சமூக நலத் துறையில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் 18 வயது பூர்த்தியடைந்து தற்போது வரை முதிர்வு தொகை பெறாதவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம். இதற்காக, பயனாளிகள் தங்களின் வைப்புத்தொகை பத்திரம், வங்கிக் கணக்குப் புத்தகம் நகல், மாற்றுச்சான்றிதழ் நகல், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் ஆகிய விவரங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். அல்லது சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள மகளிர் நல அலுவலர் மற்றும் ஊர் நல அலுவலர்களிடம் விண்ணப்பிக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in