கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கந்து வட்டி வசூல் கொடுமை : காவல் கண்காணிப்பாளர் கடும் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கந்து வட்டி வசூல் கொடுமை  :  காவல் கண்காணிப்பாளர் கடும் எச்சரிக்கை
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எளிய மக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக உள்ளூர்நபர்களிடம் கடன் பெறுவதைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களிடம் கூடுதல் வட்டி வசூலிப்பதாக அறிகிறோம்.

இதனால் கடன் பெற்றவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின் றனர். வட்டி மற்றும் அசல் தொகையை வசூலிக்க மிரட்டல், அடியாட்கள் என தில்லு முல்லு வேலைகளில் பணம் கொடுத்தவர்கள் ஈடுபடுகின்றனர்.

இதைத் தடுக்கவே, தமிழ்நாடு அரசு அதீத வட்டி வசூலித்தல் தடைச் சட்டம் 2003 என்ற சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்தச் சட்டத்தின் மூலம் அதீத வட்டி பெறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதீத வட்டி வசூல் செய்பவர்கள், தங்களிடம் கடன் பெற்றவர்களிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அவர் களுக்குச் சொந்தமான அசையும், அசையா சொத்துக்களை கைப்பற்றியிருந்தால், அவற்றை பறிமுதல் செய்து பாதிக் கப்பட்டவர்களிடம் ஒப்படைக்க இச்சட்டம் வழி வகை செய் துள்ளது.

கந்து வட்டியால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் எந்தவித அச்சத்திற் கும் ஆளாகாமல், சம்பந்தப்பட்ட காவல்துறையை அணுகலாம்.

அதீத கந்துவட்டியில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in