கொசு மூலம் டெங்கு, ஜிகா வைரஸ் பரவ வாய்ப்பு - தேவையற்ற பொருட்களில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க அறிவுறுத்தல் :

கொசு மூலம் டெங்கு, ஜிகா வைரஸ் பரவ வாய்ப்பு -  தேவையற்ற பொருட்களில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க அறிவுறுத்தல் :
Updated on
1 min read

நாமக்கல் அருகே எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசியதாவது:

மழைக்காலம் என்பதால் உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருட்கள், உடைந்த மண்பாண்டங்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவற்றில் லார்வா உருவாகும். அவற்றில் இருந்து உற்பத்தியாகும் கொசு மூலம் டெங்கு, ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தேவையற்ற பொருட்களில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும், என்றார்.

தொடர்ந்து டெங்கு தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும், மக்களுக்கு டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் முகம்மது ரஃபி, ராஜகணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in