

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் குன்றி கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள சிதிலமடைந்த கட்டிடத்தை உணர்வுகள் அமைப்பு புனரமைத்து, 5000-க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்ட நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது.
மலைக்கிராம குழந்தைகளுக்கான இந்த நூலகத்தை, ஈரோடு எஸ்பி சசிமோகன் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
தினந்தோறும் நூலகத்திற்கு வரும் குழந்தைகளுக்கு இனிப்புகளையும், பரிசுகளையும் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். மலைக்கிராமக் குழந்தைகள் எக்காரணத்தைக் கொண்டும் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடக் கூடாது. பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்திக் கொள்ள இந்த நூலகத்தில் புத்தகங்கள் உள்ளன, என்றார்.
இந்நிகழ்ச்சியில் உணர்வுகள் அமைப்பின் தலைவர் மக்கள் ராஜன், குன்றி ஊராட்சித் தலைவர் மாதேஸ்வரன், முன்னாள் தலைவர் ரவி, மலைவாழ் கிராம மக்களின் சங்க தலைவர்.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.