

போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் மனோகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா, அபின், போதை மாத்திரைகள், போதை ஊசிகள் போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் ஏதேனும் சட்ட விரோதமாக விற்பனை செய்யும், கடத்தல் செய்யும் நபர்கள் குறித்த விவரம் தெரிந்தால், பொதுமக்கள் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம். கஞ்சா விற்பனை செய்பவர்கள், கஞ்சாவை கிலோ கணக்கில் கடத்தல் செய்பவர்கள் குறித்து தகவல் தெரிந்தாலும் காவல்துறையினரிடம் தெரிவிக்கலாம்.
இதுதொடர்பாக தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும். இதுபோன்ற விவகாரங்கள் தொடர்பாக பொதுமக்கள், சென்னையில் உள்ள, போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு கட்டுப்பாட்டு அறைக்கு, எண்கள் 93447-89429, 044 -28511587 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அதேபோல், கோவை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி மனோகரன் - 94981-91067, காவல்துறை உதவி ஆய்வாளர் சுமித்ரா - 94981-04089, சிறப்பு உதவி ஆய்வாளர் குப்புசாமி 94981-66085 ஆகிய எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு காவல் துணை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.