

சேலம் மாவட்டத்தில் இதுவரை 394 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டனர். இதில், 110 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவியபோது, கருப்பு பூஞ்சை நோயால் பலரும் பாதிக்கப்பட்டனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட வர்கள், கரோனாவில் இருந்து மீண்டவர்கள், சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்டோர் கருப்பு பூஞ்சையால் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சையால் 394 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், 110 பேர் சேலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட வர்கள் வசிக்கும் பகுதிகளை சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து, தேவையான தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.