

ஈரோட்டில் ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டு பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் 23 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
ஈரோடு - பெருந்துறைசாலை பழையபாளையம் சின்னவர் வீதியைச் சேர்ந்தவர் சண்முகவேல். ஓய்வு பெற்ற பேராசிரியர். குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்குச் சென்ற சண்முகவேல், நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் 23 பவுன் நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருட்டு நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.