அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு - 14-வது ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த கோரிக்கை :

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு  -  14-வது ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த கோரிக்கை :
Updated on
1 min read

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் ஆர். ராதாகிருஷ்ணன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:

தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். கடந்த ஆட்சியின்போது அக்கட்சி தொழிற்சங்கத்தினரின் விருப்பு வெறுப்பு அடிப்படையில் பணி ஒதுக்கீடு நடைபெற்றதால், தொழி லாளர்கள் மனவேதனையுடன் பணிபுரிந்து வந்தனர்.

தற்போது ஆட்சி மாற்றத்துக்கு பின்னரும் ஓட்டுநர், நடத்துனர் பணி ஒதுக்கீட்டில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற தவறுகள் நீடிக்கின்றன.

30.9.2020-ன்படி 83,385 ஓய்வூதியர்கள் அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ளனர். கடந்த 6 ஆண்டு களாக விலைவாசிப்படி உயர்வு, ஓய்வூதிய உயர்வு வழங்கப்படவில்லை. இவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 1.9.2019 முதல் நடைமுறைப்படுத்த வேண்டிய 14-வது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in