தி.மலையில் ஆனி பிரம்மோற்சவ தீர்த்தவாரி :

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ தீர்த்த வாரி நேற்று நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ தீர்த்த வாரி நேற்று நடைபெற்றது.
Updated on
1 min read

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க மற்றும் மங்கள இசை ஒலிக்க, தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தினசரி மூலவர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும், கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் உற்சவர்களின் வீதி உலா நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. கரோனா ஊரடங்கு காரணமாக, திருவண்ணாமலை ஐயங்குளத்தில் நடைபெற வேண்டிய தீர்த்தவாரி, கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது. வேத மந்திரங்களை சிவாச்சாரியார்கள் முழங்க, தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in