

திருநெல்வேலியில் காமராஜர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக சார்பில் அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் அப்துல்வகாப், ஆவுடையப்பன், அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா மாலை அணிவித்தனர்.
காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ் கோடி ஆதித்தன், மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், பாஜக சார்பில் நயினார்நாகேந்திரன் எம்எல்ஏ., தமாகா சார்பில் மாவட்டத் தலைவர் சுத்தமல்லி முருகேசன், அமமுக சார்பில் மாவட்ட அவைத் தலைவர் தாழை மீரான், தேமுதிக சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் சின்னதுரை, சமக சார்பில் நட்சத்திரவெற்றி ஆகியோர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
கன்னியாகுமரி
இதுபோல் நாகர்கோவில் வேப்பமூட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு அனைத்துக் கட்சியினர் மற்றும் பிரமுகர்கள், அமைப்பினர் மாலை அணிவித்தனர்.
இதுபோல் குளச்சல், தக்கலை, குருந்தன்கோடு, மார்த்தாண்டம், குலசேகரம், கருங்கல், ஆரல்வாய் மொழி உட்பட மாவட்டம் முழுவதும் காமராஜர் சிலை மற்றும் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் சி.எஸ்.முரளிதரன், தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட செயலாளர்கள் ரவிச்சந்திரன், மான்சிங், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் மாநில துணைத்தலைவர் சொக்கலிங்கம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்டச் செயலாளர் பி.எம்.அற்புதராஜ், வஉசி மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்கம் சார்பில் தலைவர் அன்புராஜ் உள்ளிட்டோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வடக்கு மாவட்ட தமாகா சார்பில் காமராஜர் படத்துக்கு மாவட்ட தலைவவர் கதிர்வேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் எம்எல்ஏ காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கோவில்பட்டி
பனையூர் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி, வேப்பலோடை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த கல்வி வளர்ச்சி நாள் விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் கலந்து கொண்டார்.