ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - இயல்பை விட 106 சதவீதம் அதிகமாக பெய்த மழை :

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் -  இயல்பை விட 106 சதவீதம் அதிகமாக பெய்த மழை   :
Updated on
1 min read

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தில் இயல்பை விட 106 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 1-ம் தேதி முதல் இம்மாதம் 15-ம் தேதி வரையிலான 45 நாட்கள் நிலவரப்படி சுமார் 106 சதவீதம் இயல்பைவிட அதிகமான மழை பதிவாகியிருப்பது தெரிய வந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட கால கட்டத்தில் சராசரியாக 111.7 மி.மீ மழை பதிவாகி இருக்க வேண்டும். தற்போது, 92 சதவீதம் அதிகமாக மழை பெய்து 214.6 மி.மீ என மழை பதிவாகியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கடந்த 45 நாட்களில் சராசரி மழைப்பதிவு 119.2 மி.மீ என்றளவு இருக்க வேண்டிய நிலையில், தற்போது 113 சதவீதம் அதிகரித்து 254.3 மி.மீ ஆக பதிவாகியுள்ளது. அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் 92.9 மி.மீ ஆக இருக்கும் சராசரி மழையளவு 113 சதவீதம் அதிகரித்து 197.6 மி.மீ ஆக பதிவாகியுள்ளது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சராசரி மழையளவு 323.8 மி.மீ என்றளவை விட 106 சதவீதம் அதிகரித்து 666.5 மி.மீ ஆக மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை வரும் நாட்களில் மேலும் தொடரும் என்பதால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் ஓரளவுக்கு நிரம்பும் என்பதுடன் வடகிழக்கு பருவமழையின் மூலம் கூடுதலாக நீர்வரத்து இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

மழையளவு விவரம்

வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி அதிக பட்சமாக வேலூரில் 31.4 மி.மீ மழை பதிவானது. குடியாத்தம் 21.4, காட்பாடி 23.8, மேல் ஆலத்தூரில் 28.4, பொன்னையில் 19.2, வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் 23 மி.மீ மழை பதிவாகியுள்ளன.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக காவேரிப்பாக்கத்தில் 50 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அரக்கோணத்தில் 12.6, ஆற்காட்டில் 24, சோளிங்கரில் 36, வாலாஜாவில் 17.7, அம்மூரில் 26, கலவையில் 18.2 மி.மீ மழை பதிவாகியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in