

சேலம் மாநகராட்சி பகுதியில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறுகிறது.
சேலத்தில் இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை மாமாங்கம் அண்ணாநகர், கார்கான தெரு, வசந்தம் நகர், சையத் காதர் தெரு, ஓட்டன்காடு, கோரிமேடு, நேதாஜி நகர், வைத்தி தெரு, அல்லிக்குட்டை, கோவிந்தன் தெரு, ஜோதி மெயின் ரோடு, சவுண்டம்மன் கோயில் தெரு, எஸ்என்சி லைன், சாஸ்த்திரி நகர், வேலு தெரு, மேட்டுத் தெரு - 2 ஆகிய பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடக்கவுள்ளது.
பிற்பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை கனரா பேங்க் காலனி, அம்மாப்பாளையம் மெயின் ரோடு, சுந்தரம் காலனி, அருண் நகர், திருநகர், ராமகிருஷ்ணா ரோடு, எஸ்விகே தெரு, புத்துமாரியம்மன் கோயில் தெரு, ராமசாமி செட்டி தெரு, பருத்தி முதலியார் தெரு, கிருஷ்ணா நகர், கரி மார்க்கெட் தெரு, புட்டாமிசின் ரோடு, கருங்கல்பட்டி – 4, புரட்சி நகர் ஆகிய பகுதிகளில் முகாம்கள் நடைபெறவுள்ளது.
நண்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணா நகர், அங்கம்மாள் காலனி, பிருந்தாவனம் ரோடு, செயிண்ட்மேரிஸ் கான்வென்ட், சின்னப்பா தெரு, ராமநாதபுரம், ஹவுசிங் யூனிட், அண்ணா நகர், மாரியம்மன் கோயில் தெரு, தியாகி நடேசன் தெரு, வஉசி நகர், அம்பேத்கர் தெரு, சீரங்கன்தெரு, பாண்டு ரங்கன் எக்ஸ்டன்ஷன், பராசக்தி நகர் ஆகிய பகுதிகளிலும் முகாம்கள் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.