

சிதம்பரம் காந்தி மன்றம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம் காந்தி மன்றம் சார்பில் மாணவர்களுக்கு இணையவழியில் பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. சிதம்பரம் நகரம் மற்றும் அதனை சுற்றுள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 160 பேர் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். பேச்சுப் போட்டியில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவி விஜயலட்சுமி முதலிடமும், அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி மாணவி அனு இரண்டாமிடமும்,சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர தொடக்கப்பள்ளி மாணவி சஞ்சனா
மூன்றாமிடமும் பெற்றனர். கட்டுரைப் போட்டியில் சிதம்பரம் ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி மாணவி தாரிணி முதலிடமும், சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சுவாதி இரண்டாமிடமும், சிதம்பரம் நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அபிநயா மூன்றாமிடமும் பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு சிதம்பரம் காந்தி மன்றத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலை பேராசிரியர் முனைவர் ரவி பரிசுகள் வழங்கி பாராட்டினார். மன்ற பொருளாளர் சிவராமசேது,சின்னதுரை, காமராஜர் பேரவை நிர்வாகி டீலக்ஸ் லட்சுமணன் உள்ளிட்டவர்கள் வாழ்த்தி பேசினர். போட்டிகளில் பங்கு பெற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பரிசுப் புத்தகங்கள் அஞ்சல் துறை மூலம் அவரவர் வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்படும் என காந்தி மன்ற துணை செயலாளர் முத்துக்குமரன் தெரிவித்தார்.