சென்னைக்கு அடுத்தபடியாக - திருச்சி மாநகரில் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள் : அமைச்சர் கே.என்.நேரு உறுதி

திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ.53 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் பிளான்ட்டை நேற்று தொடங்கி வைத்து ஆய்வு செய்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு. உடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, டீன் வனிதா உள்ளிட்டோர். படம்: ஜி.ஞானவேல்முருகன்
திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ.53 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் பிளான்ட்டை நேற்று தொடங்கி வைத்து ஆய்வு செய்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு. உடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, டீன் வனிதா உள்ளிட்டோர். படம்: ஜி.ஞானவேல்முருகன்
Updated on
1 min read

சென்னைக்கு அடுத்தபடியாக சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள் நிறைந்ததாக திருச்சி மாநகரை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு ஜப்பான் நாட்டு உதவியுடன் வழங்கப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான குடல் உள்நோக்குக் கருவிகள் மற்றும் மருத்துவமனை வளாகத்தில் மாநகராட்சி நிதி ரூ.53 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி கட்டமைப்பு ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் அரசு மருத்துவமனைக்கு கேப்ஜெமினி நிறுவனம் சார்பில் ரூ.18.75 லட்சம் மதிப்பில் 25 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் சிப்காட் சார்பில் ரூ.12.50 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியன வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றன.

ஆட்சியர் சு.சிவராசு முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் மருத்துவக் கருவிகளின் பயன்பாட்டைத் தொடங்கிவைத்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியது: திருச்சியில் வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டித் தருவது, சாலைகளை மேம்படுத்துவது, அனைத்து வார்டுகளுக்கும் குடிநீரை சீராக விநியோகிப்பது உட்பட பல்வேறு திட்டங் களை மேற்கொள்ள வேண்டியுள் ளது. சாலையோரவாசிகள் இரவு நேரங்களில் தங்க அனைத்து வசதிகளும் கொண்ட தங்குமிடம் கட்டப்படவுள்ளது.

இந்தத் திட்டங்கள் அனைத்தும் முதல்வரின் அனுமதியைப் பெற்று செயல்படுத்தப்படும். சிந்தாமணி அண்ணா சிலை முதல் நீதிமன்ற வளாகம் வரை பறக்கும் சாலை அமைக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. ரயில்வே அனுமதியைப் பெற்று கோட்டை ரயில் நிலையம் அருகேயுள்ள மேம்பாலத்தைச் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சி மாநகரை சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள் நிறைந்ததாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியது:

அரசுப் பள்ளிகளில் எதிர்பார்த்ததைவிட அதிகளவில் மாணவர் சேர்க்கை உள்ளதால் பாடப் புத்தகங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடின்றி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in