முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பது பாதிப்பு : வருவாய்த்துறை மீது சிஐடியு குற்றச்சாட்டு

முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பது பாதிப்பு :  வருவாய்த்துறை மீது சிஐடியு குற்றச்சாட்டு
Updated on
1 min read

தென்காசி மாவட்ட சிஐடியு செயலாளர் வேல்முருகன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான, முறைசாரா நலவாரியத்தில் பதிவு செய்து உறுப்பினர்களாக உள்ள 60 வயது பூர்த்தியானவர்கள் ஓய்வூதியம் கேட்டு திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையாளர் (சமுக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் மனு அளித்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் இதுவரை ஓய்வூதியம் கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக சிஐடியு சங்கத்தின் சார்பில் தொழிலாளர் உதவி ஆணையாளரை நேரில் சந்தித்து கேட்டோம். அப்போது, மனு அளித்தவர்களுக்கு வருவாய்த் துறை மூலம் ஏதேனும் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதா என்ற விவரத்தை ஒப்பிட்டு சரிபார்த்து, சான்று வழங்கக் கோரி தொழிலாளர் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட ஓய்வூதிய சரிபார்ப்பு சான்று கேட்ட மனுக்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடப்பில் போடப்பட்டுள்ளது தெரியவந்தது.

தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்தில் 306, கடையநல்லுர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 229, ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 185 என, மொத்தம் 720 பேருக்கு தொழிலாளர் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து அனுப்பிய ஓய்வூதியம் சரிபார்ப்பு சான்று கேட்ட மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மனுக்கள் மீது ஆய்வு செய்து, உடனடியாக சான்றழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in