

சேலம் மாவட்டத்தில் நேற்று 162 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதில், சேலம் மாநகராட்சி பகுதியில் 25 பேருக்கும், வட்டார அளவில் ஓமலூர், கொளத்தூரில் தலா 10, வீரபாண்டி, வாழப்பாடி, எடப்பாடியில் தலா 6, தாரமங்கலம், தலைவாசல், சேலத்தில் தலா 5, ஆத்தூர், மகுடஞ்சாவடியில் தலா 4, அயோத்தியாப்பட்டணம், கெங்கவல்லியில் தலா 3, பெத்தநாயக்கன்பாளையம், சங்ககிரி, நங்கவள்ளியில் தலா 2, காடையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மேச்சேரி மற்றும் நரசிங்கபுரம் நகராட்சியில் தலா 1 மற்றும் பிற மாவட்டத்தைச் சேர்ந்த 60 பேர் உட்பட மாவட்டம் முழுவதும் 162 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.