

அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த வைப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(46). விவசாயி. அதே ஊரைச் சேர்ந்தவர் அஜித்குமார்(19). இருவருக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 11-ம் தேதி காலை மீன் வாங்க சென்ற கண்ணனிடம் அஜித்குமார், அவரது சகோதரர் அருண்குமார்(27) ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆத்திரமடைந்த அருண்குமார், கண்ணனை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த கண்ணன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தூத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அருண்குமாரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.