பாதாள சாக்கடை பணி நடைபெறும் இடங்களில் - பொதுமக்கள் கவனமாகச் செல்ல மாநகராட்சி அறிவுறுத்தல் : பள்ளங்கள் இருக்கும் என எச்சரிக்கை

பாதாள சாக்கடை பணி நடைபெறும் இடங்களில் -  பொதுமக்கள் கவனமாகச் செல்ல மாநகராட்சி அறிவுறுத்தல் :  பள்ளங்கள் இருக்கும் என எச்சரிக்கை
Updated on
1 min read

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் பா. விஷ்ணு சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் லார்சன் அண்ட் டூப்ரோ கட்டுமான நிறுவனம் மூலம் வரும் 17-ம் தேதி வரை ராமையன்பட்டி சாலை பேருந்து நிறுத்தம் முதல் ராஜபாளையம் நோக்கி செல்லும் சாலை வரையிலும், வரும் 19-ம் தேதி வரை நயினார்குளம் சாலை முழுவதும் , சுத்தமல்லி பிரதான சாலை முதல் விஸ்வநாதநகர் வரையிலும், வரும் 25-ம் தேதி வரை தச்சநல்லூர் மதுரை சந்திப்பு சாலையிலிருந்து டவுண் நோக்கி செல்லும் சாலை மற்றும் சந்திமறித்தம்மன் கோயில் ராமையன்பட்டி செல்லும் சாலை முழுவதும், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச் சாலையிலிருந்து மதுரை செல்லும் சாலை முதல் இந்தியா சிமென்ட்ஸ் ஆபிசர்ஸ் காலனி வரையிலும் பாதாள சாக்கடை திட்டப்பணி நடைபெறுகிறது.

இதுபோல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச் சாலையிலிருந்து மதுரை செல்லும் சாலை முதல் இந்திராநகர் வரையிலும், வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச் சாலையிலிருந்து மதுரை செல்லும் சாலை முதல் இந்தியா சிமென்ட்ஸ் ஆபிசர்ஸ் காலனி வரையும், வரும் 25-ம் தேதி பேட்டை- பழையபேட்டை இணைப்புச் சாலையில் இருந்து மின்சாரவாரிய அலுவலகச் சாலை வரையிலும், வரும் 28-ம் தேதி வரை டவுன் ஆர்ச்சில் இருந்து அருணகிரி தியேட்டர் செல்லும் சாலை முழுவதும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற உள்ளது.

இச்சாலைகளை கடந்து செல்லும் போது பொதுமக்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in