Published : 13 Jul 2021 03:13 am

Updated : 13 Jul 2021 03:13 am

 

Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM

ஜிஎஸ்டி சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும் : அமைச்சரிடம் கோவை தொழில் துறையினர் கோரிக்கை

கோவை

ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும் என தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தியிடம் கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அமைச்சரிடம் நேற்றுஅளிக்கப்பட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது:


மத்திய அரசால் விதிக்கப் பட்டுள்ள ஜிஎஸ்டி வரியில், லேபர்சார்ஜ் அடிப்படையில் ஜாப் ஒர்க்கில்ஈடுபடும் தொழில் முனைவோருக் கான வரி விதிப்பு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும்.

தற்போது ஜிஎஸ்டிகவுன்சிலால் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள, ஒரு பொருளை விற்பனைசெய்த விற்பனையாளர் பிரதி மாதம்11-ம் தேதிக்குள் தங்களது ஜிஎஸ்டிகணக்கை தாக்கல் செய்யாவிடில், பொருளை வாங்கிய வாடிக்கையாளர் அவர் செலுத்திய ஜிஎஸ்டி வரியை உள்ளீட்டு வரியாக எடுக்க இயலாது என்ற விதிமுறை திரும்ப பெறப்பட வேண்டும்.

ஒரு குறுந்தொழில் முனைவோர்தாம் செய்யும் வேலைக்கு பில் போடும்போது அதற்குரிய கட்டணத்தை வாடிக்கையாளரிட மிருந்து பெறுவதற்கு 90 முதல் 180நாட்கள் வரை கால தாமதம் ஆகிறது.

ஆனால் இந்த பில்களுக்கான ஜிஎஸ்டி வரியை பிரதி மாதம்20-ம் தேதிக்குள் தொழில் முனை வோர் செலுத்த வேண்டியுள்ளது.

வாடிக்கையாளரிடமிருந்து தொகை கிடைப்பதற்கு கால தாமதம் ஆனாலும் கூட தொழில் முனைவோர் அதற்கான ஜிஎஸ்டி வரியை உரிய காலத்துக்குள் செலுத்தி விட வேண்டியிருப்பதால் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

மேலும் தாமதமாக ஜிஎஸ்டி வரி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு தற்போது விதிக்கப்படும் வட்டி மற்றும் அபராத தொகையும் அதிகமாக உள்ளது. இதில் வட்டியோ, அபராதமோ இல்லாமல் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மட்டும் செலுத்தி தொழில் முனைவோர் தங்களது தொழிலை தொடர அனுமதித்தால் பேருதவியாக இருக்கும்.

ஒரு தொழில் முனைவோர் தங்களது கணக்குகளை தாக்கல் செய்து, ஆன்லைன் ரிடர்ன் தாக்கல் செய்த பிறகு அதில் ஏதாவது தவறு இருக்கும்பட்சத்தில், அந்த கணக்கில் உள்ள தவறை அடுத்த மாதம் மட்டுமே சரி செய்ய முடியும் என்பதை தளர்த்தி, உடனடியாக சரி செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட வேண்டும்.

ஜிஎஸ்டி-யில் உள்ள தொழில்களை பாதிக்கும் நடைமுறை மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஜிஎஸ்டி வரி விதிப்பில் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் தளர்வுகளை ஜிஎஸ்டி கவுன்சில் மூலமாக ஏற்படுத்தித் தரக் கோரி, கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (ஃபோசியா) மற்றும் கொடிசியா சார்பிலும் அமைச்சரிடம் கடிதங் கள் அளிக்கப்பட்டுள்ளன.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x