

சேலம் மாநகராட்சிப் பகுதியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை எம்பி மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் 37-வது கோட்டம் குமரிகிரி ஏரியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.10.58 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் மறு சீரமைப்பு பணி மற்றும் சூரமங்கலம் மண்டலம் 25-வது கோட்டம் பள்ளப்பட்டி ஏரி ரூ.12.80 கோடி மதிப்பில் மறு சீரமைக்கும் பணியையும் எம்பி பார்த்திபன் மற்றும் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மேலும், சேலம் மாநகராட்சி கோட்டம் 31-ல் ரூ.5.80 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் மற்றும் உடற்பயிற்சிக் கூடம் பணி மற்றும் தற்காலிகமாக செயல்பட்டு வரும் வஉசி மார்க்கெட்டையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 43 பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு எம்பி மற்றும் மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தினர்.
ஆய்வின்போது, மாநகராட்சி பொறியாளர் அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.