

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் நெல்லிக்குப்பம் ஈஐடிபாரி சர்க்கரை ஆலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் தென்னரசு தலைமை தாங்கினார். தலைவர் மணி, சம்பத்குமார், ராமானுஜம், ரவிக்குமார் ஆகியோர் முன் னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் சரவணன், அனைத்து கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் ஜெயதேவன், ராமலிங்கம், திரு மலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் திமுக தேர்தல் வாக்கு றுதி அடிப்படையில் கரும்புடன்னுக்கு ரூ.4,000 விலை அறிவிக்க தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். 2020 -21 கரும்பு பருவத்திற்கும் டன்னுக்கு ரூ.300 ஊக்கத் தொகையை வழங்கிட உடனடியாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண் டும். நெல்லிக்குப்பம் ஈஐடி பாரி சர்க்கரை ஆலை நிர்வாகம் கழிவுஎன்ற பெயரில் மூன்று ஆண்டு களாக பிடித்தம் செய்த கரும்புக் கான பணத்தை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப கரும்பு ஏற்றும் வாகனங்களின் வாடகையை உயர்த்தி வழங்கிடுவேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகள் வலியுறுத்தப்பட் டன. பின்னர் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஈஐடி பாரி ஆலை நிர்வாக துணை தலைவர் சங்கரலிங்கத்திடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.