கூடுதல் கல்விக் கட்டணம் வசூல் மாணவர் சங்கத்தினர் போராட்டம் :

கூடுதல் கல்விக் கட்டணம் வசூல் மாணவர் சங்கத்தினர் போராட்டம் :
Updated on
1 min read

தனியார் பள்ளிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டச் செயலாளர் டி. நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பி. பிரேம்குமார், துணைச் செயலாளர் வேல்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்டணத்தைக் குறைக்கக் கோரி முழங்காலிட்டு கோஷம் எழுப்பினர். பின்னர் ஆட்சியரிடம் மனுவை அளித்தனர்.

இதேபோல், திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் முகேஷ் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் மணிகண்டன், ஆல்வின், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பாலாஜி, மாவட்டத் தலைவர் விஷ்ணுவர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in