Published : 13 Jul 2021 03:15 am

Updated : 13 Jul 2021 03:15 am

 

Published : 13 Jul 2021 03:15 AM
Last Updated : 13 Jul 2021 03:15 AM

சேலத்தில் இருந்து புதுச்சேரிக்கு 5 அரசுப் பேருந்துகள் இயக்கம் :

சேலம்: சேலத்தில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று முதல் தினசரி 5 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த மே 10-ம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் அடுத்தடுத்து பல்வேறு தளர்வுகளுடன் பொது போக்குவரத்து தொடங்கியது. நேற்று மேலும் தளர்வு அறிவிக்கப்பட்டு புதுச்சேரிக்க்கு பேருந்து இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சேலத்தில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று பேருந்து சேவை தொடங்கியது.


இதுதொடர்பாக சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, “சேலம் கோட்டம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சேலத்தில் இருந்து புதுச்சேரிக்கு தினசரி 5 பேருந்துகளூம், விழுப்புரம் கோட்டம் சார்பில் அதிக பேருந்துகளும் இயக்கப்படுகின்றன” என்றனர்.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x