

திருச்சி அரியமங்கலம் திருமகள் அரிசி ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாரதிதாசன் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் அங்கு சென்று சோதனையிட்டனர்.
அப்போது அங்கு தலா 40 கிலோ எடையுள்ள 29 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், அரிசியை பதுக்கி வைத்திருந்ததாக மேல கல்கண்டார்கோட்டையைச் சேர்ந்த அன்வர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.