Published : 13 Jul 2021 03:15 am

Updated : 13 Jul 2021 03:15 am

 

Published : 13 Jul 2021 03:15 AM
Last Updated : 13 Jul 2021 03:15 AM

ஆட்களை கடத்தி பணம் பறித்த 3 இளைஞர்கள் கைது :

திருச்சி: திருச்சி பொன்மலை தங்கேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்ராஜ் மகன் கார்த்திக்ராஜ். இவர் கடந்த 10-ம் தேதி இரவு தனது நண்பர்களான ஆலிவர், ஆதி, மதன்குமார் ஆகியோருடன் கணேசபுரம் பகுதியில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபு(33), சோனி (எ) பரத்(23), செந்தில்குமார்(37), சூர்யா ஆகிய 4 பேரும் வலுக்கட்டாயமாக கார்த்திக்ராஜ் உள்ளிட்ட 4 பேரையும் அருகிலுள்ள ஒரு வீட்டுக்கு கடத்திச் சென்று பணத்தை பறித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியபின் அனைவரையும் விரட்டி விட்டுள்ளனர்.

இதுகுறித்து கார்த்திக்ராஜின் தந்தை ரமேஷ்ராஜ் அளித்த புகாரின்பேரில் பொன்மலை போலீஸார் வழக்கு பதிவு செய்து பிரபு, பரத், செந்தில்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். சூர்யாவை தேடி வருகின்றனர்.





Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x